நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ராதானுார் ஊராட்சிக்கு உட்பட்ட பக்கந்தாங்குடி கிராமத்தில் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திருவாடனை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பரஞ்சோதிவாசல் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரையும் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், மோகன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், வட்டார காங்., தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.