/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்தி குமரன் செந்தில் சுவாமி தேரில் உலா
/
சக்தி குமரன் செந்தில் சுவாமி தேரில் உலா
ADDED : மே 24, 2024 02:17 AM

பரமக்குடி: -பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி தேரில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தார்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது.
இங்கு செந்தில் ஆண்டவர் மற்றும் ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார்.
நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7:00 மணிக்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மலரால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்தார்.
அப்போது முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு கோயிலை அடைந்தார். விழாவை குருவடியார் சுப.இலக்குமணன் நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.