/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை, பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷம்
/
திருவாடானை, பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷம்
திருவாடானை, பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷம்
திருவாடானை, பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷம்
ADDED : ஏப் 07, 2024 04:43 AM

பரமக்குடி : திருவாடானை, பரமக்குடி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா நடந்தது.
பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில் உள்ளது. சுயம்புலிங்கமாக உள்ள இக்கோயிலில் சனி பிரதோஷ விழாவையொட்டி நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் சுவாமி அம்பாள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு அபிஷேகம் நடந்தது. வெள்ளி கவசம் சாற்றி வழிபட்டனர். எமனேஸ்வரம் எமன் ஈஸ்வரனை வழிபட்ட எமனேஸ்வரமுடையவர் கோயிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் கொடிமரத்தின் அருகில் உள்ள நந்திக்கு அபிஷேகம் நடந்தது. இதேபோல் அனைத்து சிவன் கோயில்களிலும் சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று சனி பிரேதோஷம் விழா நடந்தது. நந்திபகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.
ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர். அதே போல் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் ஆகிய கோயில்களிலும் மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன.
பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

