ADDED : ஜூன் 06, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தொருவளூரை சேர்ந்த அர்ஜுனன்.
இவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையை தொருவளூரை சேர்ந்த சமயமுத்து 48, இரு பணியாளர்களை வைத்து நிர்வகித்து வந்துள்ளார். பண்ணையில் 23 வெள்ளாடுகள் இருந்த நிலையில் நேற்று காலை பணியாளர்கள் ஆடுகளை எண்ணியுள்ளனர். அதில் 5 ஆடுகள் திருடு போனது தெரிய வந்தது. ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
