/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புல்லந்தை பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை வசதி தேவை
/
புல்லந்தை பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை வசதி தேவை
ADDED : மே 24, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை பகுதியில்மங்கேஸ்வரி நகர் பகுதி மக்கள்புல்லந்தை பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.
ஊருக்குள் இருந்து 3 கி.மீ., நடந்து பஸ் ஸ்டாப் வருகின்றனர்.
இங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.
இங்கிருந்து தான் ஏர்வாடி, ராமநாதபுரம், கீழக்கரை, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் நிழற்குடை அமைத்து தர வேண்டும், என புல்லந்தை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-----