/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ஷாப்பிங் திருவிழா துவக்கம்
/
ராமநாதபுரத்தில் ஷாப்பிங் திருவிழா துவக்கம்
ADDED : பிப் 22, 2025 06:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எகனாமிக் சேம்பர் மற்றும்இலாஹி ஷாப்பிங் மால் சார்பில் என்.எஸ்.ஏ., அரங்கத்தில் ஷாப்பிங் திருவிழா பிப்.21 முதல் 28 வரை நடக்கிறது.
நேற்று ஷாப்பிங் திருவிழாவை ராமநாதபுரம்நகராட்சித் தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் பிரவின் தங்கம் முன்னிலை வகித்தார்.
சென்னை, ராமநாதபுரம்இலாஹி ஷாப்பிங் மால் நிறுவனர் சகுபர் சாதிக், எகனாமிக் சேம்பர் தலைவர் அப்துல் ஹமீது, யுனிக் கோல்டு ஹவுஸ் செயலாளர் ஹாஜி அலி, என்.எஸ்.ஏ., பில்டிங் மெட்டீரியல்ஸ், எகனாமிக் சேம்பர் வணிகப்பிரிவு தலைவர் நவீத் ஜெர்பான் கான்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஷஹான், சின்னக்கடை பாசிப்பட்டறை பள்ளிவாசல் ஜமாத் டிரஸ்டி அஷ்ரப் அலி, செய்யது அம்மாள் கலை-அறிவியல்கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.
பில்டிங் மெட்டீரியல்ஸ், ஜவுளிகள், நகைகள், ேஷாகேஸ், அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், புட்கோர்ட், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான ஸ்டால்கள்இடம்பெற்றுள்ளன. அனுமதி இலவசம்.
தினமும் மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி, சனி, ஞாயிறு காலை 10:00 முதல் இரவு 9:00மணி வரை ஷாப்பிங் திருவிழா நடக்கிறது.