/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காசநோய் தொடர் சிகிச்சை மாத்திரைகள் தட்டுப்பாடு நோய் தீவிரமடையும் அபாயம்

ADDED : ஏப் 11, 2024 01:53 AM
ராமநாதபுரம்:-தமிழகத்தில் காச நோயாளிகளுக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சைக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காச நோய் தடுப்பு மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக தீவிர சிகிச்சைக்காக 4 மருந்துகள் கலந்த கூட்டு மருந்து சிகிச்சை (பிக்ஸ்டு டோஸ் காம்பினேஷன்) அளிக்கப்படுகிறது.
அதன்பின் 4 மாதங்களுக்கு தொடர் சிகிச்சையில் 'ப்ரி எப்.டி.சி,' என்ற தொடர் சிகிச்சைக்கான 3 மருந்துகளின் கலவைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ப்ரி எப்.டி.சி., எனப்படும் 3 மருந்துகளின் கலவை ஒரு மாதமாக சப்ளை இல்லை.
இந்த மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில காச நோய் தடுப்பு மையம் சார்பில் ஏப்.24 ல் காலாவதியாகும் மாத்திரைகள் வழங்கப்பட்டு குறைந்த அளவு மட்டுமே இருப்பில் உள்ளது.
தொடர்ந்து மாத்திரைகள் வழங்கப்படாத நிலையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு நோய் தீவிரமடையும் ஆபத்து உள்ளது. உலக சுகாதார அமைப்பால் வழங்கப்படும் இந்த மாத்திரையை மத்திய அரசு பெற்றுமாநில காச நோய் மையத்திற்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.