/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரிவாளுடன் எஸ்.ஐ., ரோந்து பரவுகிறது பழைய வீடியோ
/
அரிவாளுடன் எஸ்.ஐ., ரோந்து பரவுகிறது பழைய வீடியோ
ADDED : ஆக 01, 2024 10:50 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., சித்திரைவேலு மற்றும் போலீஸ்காரர் கருப்பசாமி உள்ளிட்ட நான்கு பேர் கடந்த ஜூன் மாதம் மேலக்கோட்டை கிராமத்தில் இரவு நேரத்தில் மணல் திருடர்களை பிடிக்க சீருடை அணியாமல் லுங்கி, டவுசர் அணிந்து, பாதுகாப்பிற்காக கையில் அரிவாளுடன் சென்றனர்.
சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவர்களிடம் விசாரித்து தகராறில் ஈடுபட்டனர். இளைஞர்கள் சிலர் தாக்க முயன்றனர். அப்போது எஸ்.ஐ., சித்திரைவேலு தாங்கள் போலீசார் எனக்கூறினார். அதை நம்பாத சிலர், 'போலீஸ் என்றால் எதற்காக லுங்கி, அரிவாளுடன் வந்தீர்கள்' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அடையாள அட்டையை காட்டியும் நம்பவில்லை.
இதையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று போலீசாரை மீட்டனர். அப்போது பதிவு செய்த வீடியோ தற்போது மாவட்டத்தில் பரவி வருகிறது.
சித்திரைவேலு கூறுகையில், “இரவில் கடத்தல்காரர்களை பிடிக்க காட்டிற்குள் போகும் போது முட்செடிகளை அகற்ற அரிவாளை எடுத்துச்செல்வோம். அந்த பகுதியில் தொடர்ந்து மணல் திருடர்களை கைது செய்ததால் இந்த பழைய வீடியோவை பரப்புகின்றனர்,” என்றார்.