ADDED : மே 20, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: மதுரை– தொண்டி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலை.
இதில் சின்னக்கீரமங்கலத்தில் இருந்து திருவாடானை செல்லும் வழியில் ரோட்டோரம் ஒரு பனைமரம் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளது. தற்போது பலத்த காற்று வீசுவதால் இந்த மரம் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
