/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை ஆணழகன் போட்டியில் வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
/
மதுரை ஆணழகன் போட்டியில் வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
மதுரை ஆணழகன் போட்டியில் வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
மதுரை ஆணழகன் போட்டியில் வாலிபருக்கு வெள்ளிப்பதக்கம்
ADDED : ஆக 13, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : மதுரையில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் தொண்டி வாலிபர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மதுரையில் யங் இந்தியா அமைப்பு சார்பில் 21 வயது உட்பட்டோருக்கு ஜூனியர் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடந்தது.
மாநில அளவிலான இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் ஆனந்தன் கலந்து கொண்டார். அவர் வெள்ளிப் பதக்கம், சீனியர் மிஸ்டர் தமிழ்நாடு என்ற ஓப்பன் கேட்டகிரியில் 60 கிலோ எடை பிரிவு ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார். அவருக்கு பதக்கமும், சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.