ADDED : ஜூலை 07, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,ல் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன் தலைமை வகித்தார். 2023--24 கல்வியாண்டில் அடிப்படை இயந்திரவியல் பயின்ற மாணவர்களுக்கு அரசு ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் பாலமுருகன், மணிமாறன், சந்திரசேகரன் திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியை ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். உடன் ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் இருந்தனர்.