/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகளுக்கு ஜூன் 10 முதல்கால்காணை நோய் தடுப்பூசி முகாம்
/
கால்நடைகளுக்கு ஜூன் 10 முதல்கால்காணை நோய் தடுப்பூசி முகாம்
கால்நடைகளுக்கு ஜூன் 10 முதல்கால்காணை நோய் தடுப்பூசி முகாம்
கால்நடைகளுக்கு ஜூன் 10 முதல்கால்காணை நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 07, 2024 05:05 AM
ராமநாதபுரம்: கால்நடைகளுக்கு கால் காணை, வாய்க்காணை நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 முதல் 21 நாட்கள் நடக்கிறது.
ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்காணை, வாய்க்காணை நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதுதொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால்காணை மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 5-வது சுற்று ஜூன் 10 முதல் தொடர்ந்து 21 நாட்கள் நடக்கிறது. இம்முகாம்களில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், ஆவின், வனத்துறை ஒருங்கிணைந்து பணிபுரிய உள்ளனர்.
முகாம்கள் நடைபெறும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள், தடுப்பூசிகள்மற்றும் மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி இடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கால்நடை பராரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் முகமதுகான், உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஜான் ரவிக்குமார் பங்கேற்றனர்.

