/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கம் விலை எகிறியதால் கடத்தல் குறைந்துள்ளது
/
தங்கம் விலை எகிறியதால் கடத்தல் குறைந்துள்ளது
ADDED : பிப் 23, 2025 01:11 AM
ராமநாதபுரம்:-சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளதால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் கடத்தல் பொருட்கள் அதிகளவில் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சமையல் பொருள்கள், போதை மாத்திரை, பவுடர், கஞ்சா, பீடி இலை, வெளி நாட்டு சிகரெட் போன்ற பொருட்கள் அதிகளவில் இங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.
இலங்கையில் சர்வதேச துறைமுகம் இருப்பதால் அங்கிருந்து தங்கம் தமிழகத்திற்கு கடத்தி வரப்படும். தற்போது உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு விலை குறைவாக இருந்தால் கடத்தி வந்து இங்கு கூடுதல் விலைக்கு விற்க முடியும். ஆனால் அங்கேயே நல்ல விலை கிடைப்பதால் கடத்தல் குறைந்துவிட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடைசியாக ஜன., 5 ல்இலங்கை கல்பிட்டி பகுதியில் 11 கிலோ 300 கிராம் தங்கம் தமிழகத்திற்கு கடத்த இருந்த போது பிடிபட்டது. அதற்கு முன் மாதம் இருமுறையாவது தங்கம் கடத்தல் நடந்தது. கடந்த 40 நாட்களாக தங்கம் கடத்தல் இல்லை. தங்கத்தின் விலை குறைந்தால் மட்டுமே இலங்கையில் இருந்து மீண்டும் கடத்தல் துவங்கும் என்றனர்.

