/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் ரேஷனில் அரிசி மூடைகள் கடத்தல்; விற்பனையாளர் கைது
/
நயினார்கோவில் ரேஷனில் அரிசி மூடைகள் கடத்தல்; விற்பனையாளர் கைது
நயினார்கோவில் ரேஷனில் அரிசி மூடைகள் கடத்தல்; விற்பனையாளர் கைது
நயினார்கோவில் ரேஷனில் அரிசி மூடைகள் கடத்தல்; விற்பனையாளர் கைது
ADDED : ஜூன் 19, 2024 05:14 AM
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் ரேஷனில் அரிசி மூடை கடத்திய விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி அருகே நயினார்கோவில் சமத்துவபுரம் ரேஷன் கடையில் செங்கல் சூளை லாரியில் அரிசி மூடைகளை கடத்தினர். இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
பரமக்குடி சிவில் சப்ளை தாசில்தார் கீதா லாரி நின்றிருந்த ஏசியன் பிரிக்ஸ் சேம்பருக்குள் ஆய்வு செய்தார். அங்கு 9 ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து குடோனில் ஒப்படைத்தார்.
அரிசியை கடத்தியவர்கள் தலை மறைவாகினர். மேலும் நயினார்கோவில் போலீசில் கீதா அளித்த புகாரில் சேல்ஸ்மேன் தர்மராஜ் கைது செய்யப்பட்டார்.