ADDED : ஜூலை 09, 2026 07:51 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கம் சார்பில் இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநில மாநாடு கோவையில் அக்., 2ல் நடத்தப்படவுள்ளது. இதன் ஆலோசகர்களாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக ஆக., கடைசியில் மண்டல அளவில் மாநாடுகள் நடக்கிறது.
கல்லுாரி மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வானவியல், விண்வெளி அறிவியல், நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கலாம். பொறியியல், கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் மண்டல அளவில் நடக்கவுள்ள மாநாட்டில் பங்கேற்க https://tass.co.in/yassc-2026 எனும் இணையதளத்தில் ஆக.,7 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கவுள்ள மாநாட்டில் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 89035 29435 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். –––
