UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 03:22 PM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் களக்குடி கிராமத்தில் 7 நாட்கள் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் தண்டாயுதபாணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேணிரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் காதர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்குடி கிராமத்தில் மரக்கன்று நடுதல், உழவாரப்பணி, டெங்கு விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜ்குமார் செய்திருந்தார்.
