/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கோயிலில் முளைக்கொட்டு விழா
/
பாம்பன் கோயிலில் முளைக்கொட்டு விழா
ADDED : ஜூலை 18, 2024 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சந்தனமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழாவையொட்டி பக்தர்கள் முளைபாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
பாம்பன் கிழக்கு வலசை தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் ஜூலை 9ல் முளைக்கொட்டு விழாவுக்கு நவதானியங்கள் பரப்பி பக்தர்கள் பாரி வளர்த்தனர். நேற்று முன்தினம் முளைக்கட்டு விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று பக்தர்கள் கோயிலில் இருந்து முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். பின் கபினி தீர்த்த குளத்தில் முளைப்பாரியை கொட்டி கரைத்தனர்.
ஏற்பாடுகளை விழாக் குழு தலைவர் பாலன், முருகேசன், அனுமந்தன், முனீஸ்வரன், ராஜசேகர், முனியசாமி, மாரி செய்திருந்தனர்.