/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களிடம் அலைபேசியை பறித்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் மீன்துறை அதிகாரிகள் அலட்சியம்

ADDED : செப் 01, 2024 01:45 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் கடலில் மூழ்கிய மீனவரை தேடிச்சென்ற மீனவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி அலைபேசியை பறித்து விரட்டியடித்தனர்.
ஆக.26ல் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் எமரிட், வெள்ளைச்சாமி உடலை மீட்க ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆக.28ல் மீனவர்களின் உறவினர்கள் சொந்த செலவில் படகில் நடுக்கடலுக்கு தேடிச்சென்றனர். அப்போது கடலில் மிதந்த எமரிட் உடலை மீட்டு ராமேஸ்வரம் திரும்பினர்.
மற்றொரு மீனவர் வெள்ளைச்சாமியை மீட்க மீன்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் மீண்டும் உறவினர்கள் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் மைக்கேல், இருளாண்டி இருவரின் படகில் 11 மீனவர்கள் தேடிச் சென்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
பொதுவாக இலங்கை பகுதியில் மீனவர் உடலை தேடிச் செல்ல ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரி, சென்னையில் உள்ள மீன்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் மூலம் சென்னையில் உள்ள இலங்கை துாதரக துணை அதிகாரிக்கு கடிதம் வழங்குவார்.
இதன்பின் தேடிச் செல்ல அனுமதி கடிதம் மீனவர்களிடம் வழங்குவது வழக்கம். ஆனால் வழக்கமாக மீன்பிடிக்க செல்ல மீன்துறை வழங்கும் அனுமதி டோக்கனில் மீட்புக் குழு மீனவர்கள் பெயரை மீன்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்து அனுப்பினர்.
ஆனால் இலங்கை எல்லை பகுதியில் தேடிச் சென்ற ஒருபடகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்து விசாரித்ததில் அனுமதி கடிதம் இல்லாதததால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த 3 அலைபேசிகளை பறித்துக் கொண்டு விரட்டினர். மீன்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அலைபேசியை பறிகொடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.