/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இலங்கை அகதிகள் கோரிக்கை
/
தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இலங்கை அகதிகள் கோரிக்கை
தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இலங்கை அகதிகள் கோரிக்கை
தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இலங்கை அகதிகள் கோரிக்கை
ADDED : மார் 04, 2025 06:29 AM

ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள், இனிமேல் தமிழகத்திற்கு வரமாட்டோம், பாஸ்போர்ட் வழங்கி இலங்கை அனுப்ப வேண்டும் என மனு அளித்தனர்.
மண்டபம் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ரஜிந்தி, அம்பிகா, கிஹாளினி, கலைச்செல்வி, அக்கினேஸ்வரி, செல்வராஜ், ராஜனி, தர்ஷிக்கா உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அகதிகள் கூறியதாவது: பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து 2022, 2023ல் படகு வழியாக இந்தியாவிற்கு வந்தோம். மீண்டும் தாயகம் செல்ல விரும்புகிறோம்.
பாஸ்போர்ட் வழங்க கோரி இந்திய துாதரகத்தில் பதிவுசெய்து 2 ஆண்டுகளாக 8 குடும்பத்தினர் அலைகிறோம். இனிமேல் தமிழகத்திற்கு வரமாட்டோம்.
எங்களது விருப்பத்தை புரிந்துகொண்டு இலங்கைக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றனர்.