ADDED : ஜூன் 11, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை சப்-டிவிசனில் பணியாற்றும் மூன்று ஏட்டுகளுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
1999ல் சேர்ந்து திருவாடானை சப்-டிவிசனில் உள்ள தொண்டி போலீஸ்ஸ்டேஷனில் பணியாற்றும் மூன்று ஏட்டுகளுக்கு மே 25க்கு பிறகு பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக பதவி உயர்வு தள்ளிப்போனது.
தற்போது தொண்டி போலீஸ்டேஷனில் பணியாற்றும் ராம்குமார், ஆசைகுமார், முருகன் ஆகியோருக்கு எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு அளித்து ராமநாதபுரம் எஸ்.பி.சந்தீஷ் உத்தரவிட்டார்.