/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தை வளாகத்தில் தேங்கிய மழை நீர்: ரோட்டுக்கு வந்த கடைகள் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஆக 15, 2024 04:13 AM

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே டி-பிளாக் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியதால் ரோட்டில் அமைக்கப்பட்ட கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தைத் திடலில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை செயல்பட்டது. அங்கு பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப் பணி நடப்பதால் தற்போது பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் அம்மா பூங்கா அருகே புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
சில நாட்களாக மழை பெய்து வருவதால் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இதனால் நேற்று கடை அமைக்க இடமின்றி வியாபாரிகள் டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே வாரச்சந்தை கட்டணம் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றி மீண்டும் நீர் தேங்காத வகையில் அவ்விடத்தை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.