/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சன்னதி தெருவில் தேங்கிய மழை நீர்
/
சன்னதி தெருவில் தேங்கிய மழை நீர்
ADDED : ஆக 12, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை சன்னதி தெருவில் ஆங்காங்கே மழை நீர் தேங்குதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானையில் சன்னதி தெரு, ஓரியூர் விலக்கு நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் மழை நீர் பல நாட்களாக தேங்கியுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் மீதும் கழிவு நீர் தெரிக்கிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை ஓரக்கடைகாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

