/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி; வெற்றி பெற்ற மாணவர்கள்
/
மாநில குத்துச்சண்டை போட்டி; வெற்றி பெற்ற மாணவர்கள்
மாநில குத்துச்சண்டை போட்டி; வெற்றி பெற்ற மாணவர்கள்
மாநில குத்துச்சண்டை போட்டி; வெற்றி பெற்ற மாணவர்கள்
ADDED : மே 10, 2024 11:30 PM

முதுகுளத்துார்: விருதுநகரில் தனியார் பள்ளியில் மாநில அளவிலான ஓபன் பாக்சிங் போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதுகுளத்துார் டைகர் குத்துச்சண்டை இன்ஸ்டிட்யூட் சார்பில் 19 மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனியர், சப்-ஜூனியர், ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. முடிவில் முதுகுளத்துார் டைகர் குத்துச்சண்டை இன்ஸ்டி்யூட் சேர்ந்த 5 மாணவர்கள் தங்கப்பதக்கம், 9 மாணவர்கள் வெள்ளி, 5 மாணவர்கள் வெண்கலம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை டைகர் பிட்னஸ் அகாடமி உரிமையாளர் பாஸ்கரன், பெற்றோர் உட்பட பலர் பாராட்டினர்.