/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 05:33 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் நகர் கிளை, புறநகர் கிளை, ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார் ஆகிய அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டியு.சி., டி.டி.எஸ்.எப்., சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும். மினி பஸ்சை அரசே இயக்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வாரிசு வேலை வழங்க வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.ராமநாதபுரம் நகர் கிளை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் துரைப்பாண்டியன், மத்திய சங்க துணைத்தலைவர் வி.பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புறநகர் கிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
செயலாளர் எம்.பாஸ்கரன், பொருளாளர் ராம்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.