/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புள்ளியியல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
புள்ளியியல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2024 05:15 AM

ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் பால் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார், அமைப்பு செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். புள்ளியியல் துணை இயக்குநர் சங்கர் ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கிறார்.
இரவு 7:00மணிக்கு மேல் கைவிளக்கு, அலைபேசி டார்ச் வெளிச்சத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள சொல்கிறார். இதனால் அலுவலர்களுக்கு மன உளச்சல் ஏற்படுவதாக கூறி துணை இயக்குநரை கண்டித்து கோஷமிட்டனர்.
மாநிலச் செயலாளர் சரவணக்குமார், துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.---------