/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி
ADDED : மே 14, 2024 09:09 AM

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் இரும்பு கர்டர் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.550 கோடி செலவில் 2020ல் பாம்பன் கடலில் 2.1 கி.மீ.,க்கு புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.
இதில் 1.6 கி.மீ.,ல் ஒரு பகுதியில் 100 சதவீதம் பாலம் பணி முடிந்த நிலையில், மீதமுள்ள 500 மீ., க்கு துாண்கள் அமைத்த நிலையில் கர்டர், தண்டவாளம் பொருத்தவில்லை.இதற்கு காரணம், பாம்பன் கிழக்கு கடற்கரையில் 700 டன்னில் துாக்கு பாலம் வடிவமைத்து பாலம் நடுவில் கொண்டு செல்ல 400 மீ., நகர்த்தப்பட்டு இன்னும் 80 மீ., துாரம் மீதம் உள்ளது. மே 20ல் துாக்கு பாலத்தை நடுவில் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பணி முடியாமல் நிலுவையில் உள்ள 500 மீ., பகுதியில் நேற்று முதல் இரும்பு கர்டர் பொருத்தும் பணியை ஊழியர்கள் துவக்கி உள்ளனர்.
கர்டர், தண்டவாளம் மற்றும் துாக்கு பாலத்தை சரியாக பொருத்தி ஆய்வு செய்ய 3 மாதங்கள் நீடிக்கும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

