/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே: இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் கோரிக்கை
/
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே: இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் கோரிக்கை
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே: இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் கோரிக்கை
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே: இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் கோரிக்கை
ADDED : ஆக 17, 2024 12:17 AM

பெரியபட்டினம், : கட்டுக்கடங்காத மணல் கொள்ளையை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெரியபட்டினத்தை சேர்ந்த திருப்புல்லாணி ஒன்றிய இந்திய கம்யூ., செயலாளர் சொக்கலிங்கம் 60, கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்புல்லாணி ஒன்றியத்தில் 25 நாட்களுக்கும் மேலாக ஊருணி மற்றும் குளங்களில் சவடு மண் எடுத்து கரையை பலப்படுத்தி முறையாக ஆழப்படுத்த அரசு உத்தரவிட்டது. இதனை பயன்படுத்தி அதிகளவு மண் எடுத்து மணல் கொள்ளைக்கு வழி கொடுக்கும் போக்கிற்காக ஆதங்கத்துடன் இவர் வெளியிட்ட வீடியோ பரவி வருகிறது.
சொக்கலிங்கம் கூறியதாவது: பெரியபட்டினம் மற்றும் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் பழமை வாய்ந்த ஊருணிகளை எல்லாம் தோண்டுவதற்கு அங்குள்ள மண்ணை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தினால் பருவமழைக் காலங்களில் மழை நீரை தேக்குவதற்கு வசதியாக இருக்கும்.
முற்றிலும் மாறாக ஊருணியில் உள்ள நல்ல சலங்கை மண்ணை தோண்டி எடுத்து பெரும் பள்ளத்தை உருவாக்கி அதில் உள்ள மண்ணை டிப்பர் லாரி, டிராக்டர்களில் இயந்திரங்களின் உதவியுடன் அள்ளிச் சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
மண்ணை விற்று சாப்பிடுவதற்கு திரிகிறார்கள். மண்ணை தோண்டும் போது கரைகளை பலப்படுத்தாமல் விட்டால் தண்ணீர் கிராமங்களுக்குள் புகும் நிலை உள்ளது. முதல்வர் இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு டிராக்டர் மண் ரூ.5000த்திற்கு அதே பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து கேட்டால் நாங்கள் ஒன்றும் சும்மா மண் அள்ளவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணம் கொடுக்கிறோம். இதில் பங்கு போடுகிறார்களே அவர்களுக்கு வெட்கமாக இல்லை. பழமை வாய்ந்த ஊருணியின் மண்ணை அள்ளி கனிமவள கொள்ளை அடிக்கின்றனர். வெறிகொண்டு அலையும் இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

