/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.டி.பி.ஐ., காத்திருப்பு போராட்டம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் தீர்வு

ADDED : ஆக 29, 2024 11:25 PM
பெரியபட்டினம் : பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நடந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பெரியபட்டினம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், எக்ஸ்ரே மெஷின் மற்றும் காம்பவுண்டு சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் துவக்கப்பட்டது.
நேற்று எஸ்.டி.பி.ஐ., கட்சியினருடன் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் அக்.,ல் புதியதாக டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவதோடு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கும் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.