/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முனியாண்டிபுரத்தில் தெரு நாய்கள் தொல்லை
/
பரமக்குடி முனியாண்டிபுரத்தில் தெரு நாய்கள் தொல்லை
ADDED : மே 26, 2024 03:53 AM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் 36வது வார்டுக்கு உட்பட்ட முனியாண்டிபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றனர். இதனையொட்டிய வேந்தோணி ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில் நாய்களால் மக்கள் அச்சம் அடைகின்றனர்.
மேலும் இந்த ரோட்டில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி செல்வதால் புதிதாக செல்வோரை நாய்கள் குறி வைத்து கடிக்கின்றன. நகராட்சியில் 36 வார்டுகளிலும் நாய்கள் பெருக்கம் அதிகம் உள்ள நிலையில் இங்கு மட்டும் 40க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக திரிகின்றன.
ஆகவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.