/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 5பேரை கடித்த தெருநாய்கள் : பீதியில் மக்கள்
/
பரமக்குடியில் 5பேரை கடித்த தெருநாய்கள் : பீதியில் மக்கள்
பரமக்குடியில் 5பேரை கடித்த தெருநாய்கள் : பீதியில் மக்கள்
பரமக்குடியில் 5பேரை கடித்த தெருநாய்கள் : பீதியில் மக்கள்
ADDED : ஆக 24, 2024 03:43 AM

பரமக்குடி: - பரமக்குடி சின்னக்கடை தெருவில் நாய்கடியால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரோட்டில் நடந்துசெல்ல மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் கூட்டமாக திரிகிறது. ஏராளமான நாய்கள் சொறி பிடித்துள்ளன.
இந்நிலையில் நாய்கள் தெருக்களில் புதிதாக செல்வோர் உட்பட குழந்தைகள் மற்றும் மாணவர்களை கடிக்கும் நிலை உள்ளது. சிலர் அப்பகுதியை விட்டு மாற்று இடங்களில் படிக்கும் நிலை உள்ளது. நேற்று சின்ன கடை தெரு, பள்ளிவாசல் பகுதிகளில் 5 பேர் வரை நாய் கடித்துள்ளது. நேற்று முன்தினம் எமனேஸ்வரம் பகுதியில் 3 பேரை கடித்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளும் செல்லும்படி உள்ளது. எனவே வெறி மற்றும் சொறி பிடித்த நாய்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.