/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம்-சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 65 கி.மீ.,ல் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அமைப்பு

ADDED : ஆக 25, 2024 04:26 AM
முக்கிய பாலங்கள், அதிக விபத்து ஏற்படுத்தும்இடங்கள் மற்றும் சிறு பாலங்கள் குறிப்பிட்ட இடங்களில் உள்ளன. இந்நிலையில் 2022ல் அதிக விபத்து ஏற்படக்கூடியஇடங்களை கண்டறிந்து சாலை அகலம் விரிவாக்கம் செய்யப்பட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பிரதான சாலையாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. நாள்தோறும் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் ராமநாதபுரத்தில் இருந்து பஸ்கள்இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு கிராமம் மற்றும் சிறு நகரங்களில் பிரதான சாலைகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூறியதாவது:
ராமநாதபுரம்- சாயல்குடி வழியாக கன்னிராஜபுரம் எல்லை வரை அதகஅளவில் வேகத்தடைகள் உள்ளன. 60க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை உரிய அனுமதியின்றி அமைத்துள்ளனர். இதனால் பஸ்சில் வேகமாக செல்லும் போது கவனிக்கப்படாத வேகத்தடையில் ஏறும் போது பின்னால் அமர்ந்திருப்பவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனால் முதுகு வலி, மூட்டு வலி உள்ளிட்டவைகளின் காயம் ஏற்பட்டு பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி தேவையான ஆபத்துள்ள இடங்களில் மட்டுமே நிறுவி தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச்சு இல்லாததால் இரவு நேரங்களில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.