ADDED : ஏப் 29, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: கர்நாடகா தும்கூரில் 24 வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சமீபத்தில் நடந்தது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவி மதுமிதா வெண்கலப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மதுமிதாவை தாளாளர் சின்னதுரை அப்துல்லா பாராட்டினார். முதல்வர் பெரியசாமி, சிவில் பொறியியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் வாழ்த்து தெரிவித்தனர். ––––
