/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறந்தவெளியில் சத்துணவு சமையல் புகையால் மாணவர்கள் பாதிப்பு
/
திறந்தவெளியில் சத்துணவு சமையல் புகையால் மாணவர்கள் பாதிப்பு
திறந்தவெளியில் சத்துணவு சமையல் புகையால் மாணவர்கள் பாதிப்பு
திறந்தவெளியில் சத்துணவு சமையல் புகையால் மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஆக 24, 2024 03:42 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில், சத்துணவு கூட கட்டடம் இல்லாததால், வகுப்பறை அருகே திறந்த வெளியில் சமையல் செய்வதால் ஏற்படும் புகையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி அருகே ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், சத்துணவு கூடத்திற்கு கட்டடம் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் வகுப்பறையை ஒட்டியுள்ள குறுகலான இடத்தில் திறந்த வெளியில், ஊழியர்கள் சமையல் செய்கின்றனர். அப்போது ஏற்படும் புகையால், வகுப்பறையில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் அனுராதா கூறுகையில், சமையல் கூடமின்றி, ஊழியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் படும் சிரமம் குறித்து, பலமுறை பேரூராட்சி நிர்வாகம்மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
ஆனால், இதுவரைஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். கலெக்டர்உடனடி தீர்வு காண வேண்டும் என்றார்

