/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்ணை கட்டி இடைவிடாமல் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்
/
கண்ணை கட்டி இடைவிடாமல் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்
ADDED : ஆக 23, 2024 03:50 AM

முதுகுளத்துார்: திருப்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்டரஸ் சிலம்பாட்ட கழகம் சார்பில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம், திருப்பூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் புலி முருகன் சிலம்பம் பயிற்சி பள்ளியில்இருந்து விளங்குளத்துார், வெங்கலக்குறிச்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மைதானத்தில் இந்திய வரைபடம் வரைந்து 78 நிமிடம் 78 நொடி இடைவிடாமல் மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றினர்.
இது கிரகாம்பெல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது. மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாஸ்டர் முருகன் மற்றும் மாணவர்களை பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டினர்.