/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 28, 2024 04:03 AM
ராமநாதபுரம் : டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில் சேர தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவக் கல்லுாரியில் ஜூலை- 2025க்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பதாரார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஜூலை 2025 ல் பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2012 ஜூலை 2க்கு முன்பாகவும், 2014 ஜன.1-க்கு பிறகும் பிறந்திருக்கக் கூடாது. அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 7 ம் வகுப்பு படிப்பவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு 2024 டிச.1ல் நடைபெற உள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர் சென்னை--600 003 என்ற முகவரிக்கு செப்.30க்குள் அனுப்ப வேண்டும்.
விபரங்களுக்கு www.rimc.gov.in என்ற ராணுவக் கல்லுாரி இணையதளம் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04567--230 045 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.