/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடல்
/
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடல்
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடல்
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடல்
ADDED : ஏப் 30, 2024 10:50 PM
பரமக்குடி- - பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் மதுரை வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண் அனுபவத்திட்ட பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நான்காம் ஆண்டு மாணவி ஜெரினா அட்லின் கமுதகுடியில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் பற்றியும் கேட்டறிந்தார். தொடர்ந்து பழத்தோட்ட செடிகளில் ஆண் பழ ஈக்களை பெண் ஈக்களின் திரவம் மூலம் ஈர்க்கும் பழ ஈ பொறி மூலம் கட்டுப்படுத்தும் தன்மைக்கு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த பொறியை பயன்படுத்துவதன் மூலம் பழங்களை தாக்கும் பழ ஈக்களை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.