/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முள்ளுவாடி பள்ளியில் மாணவர்கள் கவுரவிப்பு பதக்கம் அணிவிக்கப்பட்டது
/
முள்ளுவாடி பள்ளியில் மாணவர்கள் கவுரவிப்பு பதக்கம் அணிவிக்கப்பட்டது
முள்ளுவாடி பள்ளியில் மாணவர்கள் கவுரவிப்பு பதக்கம் அணிவிக்கப்பட்டது
முள்ளுவாடி பள்ளியில் மாணவர்கள் கவுரவிப்பு பதக்கம் அணிவிக்கப்பட்டது
ADDED : ஆக 20, 2024 07:28 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளுவாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2012 முதல் தற்போது வரை படித்த முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முள்ளுவாடி மற்றும் சுற்றுவட்டார மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது வேறு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டது.
திருப்புல்லாணி உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். பறக்கும் படை தாசில்தார் தமீம் ராசா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உஷா வரவேற்றார்.
திருப்புல்லாணி யூனியன் துணை தலைவர் சிவலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தமூர்த்தி, ஆதஞ்சேரி பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் சேதுபதி, சைல்ட்லைன் ஒருங்கிணைப்பாளர் விஜயராம் உட்பட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுதர்சன் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.