/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதுமான வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
/
போதுமான வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
போதுமான வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
போதுமான வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
ADDED : மார் 04, 2025 06:26 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைபள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர்.
எனவே அருகேயுள்ள அரசு நிலத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என முன்னாள் மாணவர் சங்கம் வலியுறுத்தினர்.
வெங்கலக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியில் கருங்காலங்குறிச்சி, வெங்கலக்குறிச்சி உள்ளிட்ட அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 85க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு கடந்த பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி கட்டடம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப போதுமான வகுப்பறை வசதி இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது, மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப வகுப்பறை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் - வெங்கலக்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு உயர் நிலைப்பள்ளிக்கு தேவையான கட்டடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும்காலங்களில் இப்பகுதியில் கிராமத்தில் உள்ள மாணவர்களின் நலன்கருதி கூடுதல் மாணவர்களை சேர்க்கும் விதமாக கூடுதலாக வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்றனர்.