/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பால் மாணவர்கள் சிரமம்
/
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பால் மாணவர்கள் சிரமம்
ADDED : பிப் 26, 2025 07:04 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி புரியும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் இருந்தனர்.
ஒரு சில பள்ளிகளில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் பாடங்களை நடத்தினர்.
போதிய ஆசிரியர்கள் இல்லாததால் சில பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.