/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு கலைக் கல்லுாரியில் குடிநீர் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு
/
அரசு கலைக் கல்லுாரியில் குடிநீர் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு
அரசு கலைக் கல்லுாரியில் குடிநீர் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு
அரசு கலைக் கல்லுாரியில் குடிநீர் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 15, 2024 04:06 AM
கடலாடி : கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 5 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வராததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு கடந்த கல்லுாரிக்கு முன்பாக காவிரி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குளம் போல் தேங்கியது. அதை சரிசெய்தபிறகும் குடிநீர் வழங்கவில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:
காவிரி குடிநீர் கட் செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே கல்லுாரி நிர்வாகத்தினர் மாற்று ஏற்பாடாக வெளியில் இருந்து டேங்கர் மூலமாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். 2017க்கு பிறகு கட்டப்பட்ட அரசு கலைக் கல்லுாரியில் கட்டடங்கள் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் காணப்படுகிறது. மராமரத்து பணி மற்றும் குடிநீர் வசதி செய்துதர கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.