/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வு; பரிசளித்த சப் -கலெக்டர்

ADDED : மார் 28, 2024 10:55 PM

பரமக்குடி : லோக்சபா தேர்தலையொட்டி பரமக்குடி பெருமாள் கோயில் தெருவில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பரமக்குடி சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் கோலமிட்டனர். வண்ணக் கோலங்களில் 100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயகம் காப்போம், தேர்தல் நாள் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் என கோலமிட்டு வரைந்திருந்தனர்.
பரமக்குடி தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். கோலமிட்ட பெண்களுக்கு சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் பரிசளித்து பாராட்டினார். தேர்தல் தனித் துணை தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார்கள் ஐயப்பன், சங்கர், நகராட்சி அலுவலர் சுதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பாடல்களைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.