/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சப்-கலெக்டர் உத்தரவு நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை

ADDED : மே 02, 2024 05:06 AM
பரமக்குடி: பரமக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பரமக்குடி நகராட்சியில் உள்ள பிரதான ரோடுகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் முறையாக நிறுத்தப்படாததால் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.தொடர்ந்து கடைகளின் பொருட்களை ரோட்டை ஆக்கிரமித்து வைப்பதுடன், விளம்பர போர்டுகளையும் ரோட்டில் வைப்பதால் மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து அவ்வப்போது தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஐந்து முனை ரோடு துவங்கி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெரிய பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது ரோட்டோரங்களில் டூவீலர்களை ஒரே வரிசையில் மட்டும் நிறுத்தப்பட வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்கு டூவீலர்களில் வருவோர் அதனை நிறுத்த நகராட்சி இடத்தில் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். கடைகள் ஆக்கிரமிப்பு மற்றும் போர்டு உள்ளிட்டவைகளை அவர்கள் இடத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
வரும் நாட்களில் ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுப்பதுடன், டூவீலர்களை முறையாக நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்றார். பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கண்ணன், தாசில்தார் சாந்தி, நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் இருந்தனர்.