/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுப்பிரமணிய சுவாமி கோயில் காவடி விழா
/
சுப்பிரமணிய சுவாமி கோயில் காவடி விழா
ADDED : மார் 25, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி, பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி ஐயப்பன் கோயிலில் இருந்து காவடிகள் புறப்பட்டன. இளநீர் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் பால் குடங்களை சுமந்து ஆண் பெண் பக்தர்கள் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக 11:00 மணிக்கு கோயிலை அடைந்தனர்.
அங்கு மூலவர் மற்றும் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 25 வது ஆண்டாக மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

