
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே காவனுாரில் நயினார்கோவில் ரோட்டில் ரோட்டோரங்களில் குப்பை கொட்டி எரிப்பதாலும், காற்றில் துாசி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்களில் கட்டட இடிபாடு, குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டுகின்றனர்.
குறிப்பாக தற்போது ஆர்.காவனுார் நயினார்கோவில் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டும் பணிக்காக பயன்படுத்திய சிமென்ட் சாக்கு பைகள் சிதறி கிடப்பதால் துாசி பறந்து அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

