/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி
/
அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி
ADDED : ஏப் 16, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன.
இங்கு கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக காலை மற்றும் மாலை நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கீழக்கரை நகர் பகுதிகளில் 10 முதல் 15 தடவைக்கு மேல் தொடர்ந்து மின்தடை செய்யப்படுவதால் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர் பாதிப்பை சந்திக்கின்றனர்.
எனவே கீழக்கரை மின்வாரியத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

