/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்
ADDED : மே 03, 2024 05:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பைக்கு தீவைப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை மண்டி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பட்டிணம்காத்தான்ஊராட்சியில் வருகிறது. அலுவலக வளாகத்தில் சேரும்குப்பையை சுகாதார பணியாளர்கள் தீவைத்து எரிக்கின்றனர்.
பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருப்பதால்அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இப்பகுதியில் வரும் மக்களுக்கு மூச்சுத் திணறல்ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடக் கழிவு மேலாண்மைதிட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைக்கு தீவைப்பதால் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலகவளாகத்திலேயே இது போன்ற செயல்கள் நடப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.