/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை வெயில்: பாம்பனில் மீனவர்கள் கடல்பாசி சேகரிப்பு
/
கோடை வெயில்: பாம்பனில் மீனவர்கள் கடல்பாசி சேகரிப்பு
கோடை வெயில்: பாம்பனில் மீனவர்கள் கடல்பாசி சேகரிப்பு
கோடை வெயில்: பாம்பனில் மீனவர்கள் கடல்பாசி சேகரிப்பு
ADDED : மார் 28, 2024 10:56 PM

ராமேஸ்வரம் : கோடை வெயில் சுட்டெரிப்பதால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் மீனவர்கள் கடல்பாசி சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோடை காலமான மார்ச் முதல் மே வரை வெயில் சுட்டெரிக்கும். இந்நாட்களில் கடலில் அதிக வெப்ப சலனம் ஏற்பட்டு தட்பவெப்ப நிலை மாறுபடும். இந்நிலையில் பாம்பன் வடக்கில் பாக் ஜலசந்தி கடலோரத்தில் மீனவர்கள் வளர்த்த கடல்பாசிகள் வெயிலுக்கு அதிக மகசூல் தராமல் பாதிக்கப்படும்.
இதனால் கடந்த சில நாள்களாக கடல் பாசியை மீனவர்கள் அறுவடை செய்து நாட்டுப்படகில் சேகரித்தனர். இதனை பாம்பன் ரயில் பாலத்தை கடந்து தெற்கில் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இங்கு கடல்பாசிகளை வெயிலில் 10 நாள்கள் உலர வைத்த பின் லாரியில் மானாமதுரையில் உள்ள ஆலைக்கு அனுப்ப உள்ளனர். அங்கு உணவு பொருள் தயாரிக்க ஏதுவாக தரம் பிரிப்பார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.

