/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் கோடை நெல் விவசாயப் பணிகள்
/
பசும்பொன்னில் கோடை நெல் விவசாயப் பணிகள்
ADDED : ஏப் 20, 2024 04:59 AM

கமுதி: கமுதி அருகே பசும்பொன்னில் கோடை நெல் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.
கமுதி அருகே முஸ்டகுறிச்சி, சம்பக்குளம், நகரத்தார் குறிச்சி, பசும்பொன், முத்தாலங்குளம், நாராயணபுரம், முதல்நாடு, புதுக்கோட்டை, கோவிலாங்குளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் செய்தனர்.
கடந்தாண்டு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கடந்தாண்டு நெல் விவசாயம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டது. பருவமழை காலத்தில் பெய்த மழைநீரை ஊருணி, கண்மாயில் தேக்கி வைத்தனர்.
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் கோடை விவசாயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெல் விவசாயம் செய்தனர். தற்போது களை பறிக்கப்பட்டு பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளது. தற்போது ஊருணி, கண்மாய்,போர்வெல் தண்ணீரை மோட்டார் வைத்து பாய்ச்சி வருகின்றனர். நன்கு முளைக்கத் துவங்கியதால் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.

