/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி
/
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி
ADDED : மார் 06, 2025 04:00 AM

பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள நிலையில் கண்களுக்கு விருந்தாக பூத்துக் குலுங்குகின்றன.
சூரியகாந்தி செடிகள் 90 முதல் 95 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். இதில் 42 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. பொதுவாக நெல், பருத்தி, மிளகாய், சிறுதானிய பயிர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் சூரியகாந்தி விதைகளை வாங்கத் தயாராக உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பரமக்குடி அருகே பொட்டிதட்டி மற்றும் நயினார்கோவில் பகுதி மஞ்சக்கொல்லை ஆகிய இடங்களில் சூரியகாந்தி விதைக்கப்பட்டது. இதற்காக இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து தொழு உரம் இடப்பட்டுள்ளது. இச்செடிகளை வேளாண் துறையினர் ஆலோசனையின் பேரில் விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி தொடர்ந்து மகசூல் அளித்து வருமானம் கிடைக்கும் நிலையில் அதிக ஏக்கரில் பயிரிட வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.