/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
ADDED : செப் 13, 2024 04:58 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் இடுபொருட்களை பணமில்லா பரிவர்த்தனையில் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நயினார்கோவில் பகுதியில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, வேளாண் உபகரணங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், தெளிப்பான்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு, கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட அனைத்து பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இடுபொருளுக்கான முழு தொகை அல்லது பங்களிப்பு தொகை செலுத்த முடியும்.
வரும் காலங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே இடுபொருட்களை பெற முடியும் என நயினார் கோவில் வேளாண் அலுவலர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.